ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இலவச மருத்துவ திட்டம்: ஒடிசா முதல்வர் தொடக்கி வைத்தார்

ஒடிசா மாநிலத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பணமில்லாமல் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறும் வகையில் சுகாதார ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இன்று தொடக்கி வை

News image
இலவச மருத்துவ திட்டம்: ஒடிசா முதல்வர் தொடக்கி வைத்தார்
Updated On :20 ஆகஸ்ட் 2021, 12:32 pm

DIN


ஒடிசா மாநிலத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பணமில்லாமல் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறும் வகையில் சுகாதார ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இன்று தொடக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த் 3.5 கோடி மக்கள், மாநிலத்தில் உள்ள 200 மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற முடியும்.

போன்டா பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, சுகாதார ஸ்மார்ட் அட்டைகளை வழங்கி நவீன் பட்நாயக் திட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளார். இந்த அட்டை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த அட்டையைப் பயன்படுத்தி சிகிச்சை பெறும் ஏழை எளிய மக்களின் மருத்துவச் செலவை மாநில அரசே வழங்கும் வகையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.