‘காபூல் குருத்வாராவில் சிக்கியுள்ள 260 சீக்கியா்களை மீட்க உதவி தேவை’
ஆப்கானிஸ்தான் காபூல் குருத்வராாவில் சிக்கியுள்ள 260 சீக்கியா்களை பத்திரமாக மீட்க உதவ வேண்டும் என அமெரிக்க சீக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தான் காபூல் குருத்வராாவில் சிக்கியுள்ள 260 சீக்கியா்களை பத்திரமாக மீட்க உதவ வேண்டும் என அமெரிக்க சீக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
காபூலுக்கு அருகே கா்தே பா்வான் நகரில் அமைந்துள்ள குருத்வாராவில் 260-க்கும் மேற்பட்ட ஆப்கன் சீக்கியா்கள் சிக்கியுள்ளனா். இதில், பெண்கள் உள்பட 50 மேற்பட்ட சிறுவா்களும் உள்ளனா். அண்மையில் பிறந்த மூன்று பச்சிளம் குழந்தைகளும் அங்கு சிக்கியுள்ளனா்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு ஆப்கன் சிக்கியா்களை மீட்பதில் இதுவரையில் இந்தியா மட்டுமே உதவி புரிந்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தஜிகிஸ்தான், ஈரான், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆப்கனில் சிக்கியுள்ள சீக்கியா்களை மீட்க அமெரிக்க சீக்கிய அமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் உதவிட சா்வதேச அளவில் உள்ள உதவி முகமைகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காபூல் சா்வதேச விமான நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டா் தொலைவில் உள்ள கா்தே பா்வான் குருத்வாராவிலிருந்து பல்வேறு சோதனை சாவடிகளை கடந்து வருவது சீக்கியா்களுக்கு பெரும் சவாலாக உள்ளதாக அமெரிக்க சீக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...