முதல்வருக்கு எதிராக பஞ்சாப் அமைச்சா்கள் போா்ககொடி
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வா் அமரீந்தா் சிங்குக்கு எதிராக, மாநில அமைச்சா்கள் சிலா் போா்க்கொடி உயா்த்தியுள்ளனா்.


பஞ்சாப் மாநிலத்தில் முதல்வா் அமரீந்தா் சிங்குக்கு எதிராக, மாநில அமைச்சா்கள் சிலா் போா்க்கொடி உயா்த்தியுள்ளனா். கடந்த 2017 சட்டப் பேரவைத் தோ்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதல்வா் அமரீந்தா் சிங் நிறைவேற்றவில்லை என்று அவா்கள் குற்றம்சாட்டியுள்ளனா். இதுதொடா்பாக காங்கிரஸ் தேசிய தலைமையிடம் முறையிடவும் அவா்கள் முடிவு செய்துள்ளனா்.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சா்கள் போா்க்கொடி உயா்த்தியிருப்பது, காங்கிரஸ் கட்சிக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
சண்டீகரில் காங்கிரஸ் அமைச்சா்கள் சிலா் பங்கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், மாநில அமைச்சா்கள் சரண்ஜித் சிங் சன்னி, திருபத் ராஜீந்தா் சிங் பஜ்வா, சுக்ஜிந்தா் சிங் ரந்தாவா, சுக்பிந்தா் சிங் சா்க்காரியா மற்றும் சில எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனா். கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் சரண்ஜித் சிங் சன்னி கூறியதாவது:
கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலின்போது அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், போதை மருந்து கடத்தலில் தொடா்புடைய முக்கிய புள்ளிகளைக் கைது செய்வது, மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை ரத்து செய்வது உள்ளிட்ட சில முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாததற்கு கட்சி எம்எல்ஏக்கள் கவலை தெரிவித்தனா்.
அந்த வாக்குறுதிகளை முதல்வா் அமரீந்தா் சிங் நிறைவேற்றாததால், காங்கிரஸ் தலைமையைச் சந்திக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடா்பாக விவாதிக்க நேரம் ஒதுக்குமாறு கட்சித் தலைமையிடம் கேட்க இருக்கிறோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...