3-வது அலையில் மகாராஷ்டிரம் அதிகம் பாதிக்கப்படும்: சுகாதாரத் துறை
கரோனா மூன்றாவது அலையில் மகாராஷ்டிரத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் பதிவாகலாம் என்று சுகாதாரத் துறை கணித்துள்ளது.


கரோனா மூன்றாவது அலையில் மகாராஷ்டிரத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் பதிவாகலாம் என்று சுகாதாரத் துறை கணித்துள்ளது.
அதிகபட்சமாக மும்பை, புணே நகரங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலையில் மார்ச் 11-ம் தேதி 91,100 பேருக்கு அதிகபட்சமாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கரோனா மூன்றாவது அலையில் புணே நகரில் 1.36 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் அலையில் மார்ச் 19-ம் தேதி 1.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது அலையில் இது 1.87 லட்சமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாக மும்பை மற்றும் புணே நகரங்கள் இருக்கும். இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...