புதுவை சட்டப்பேரவைத் துணைத்தலைவர் தேர்தல்: ராஜவேலு வேட்புமனு
புதுவை சட்டப்பேரவை துணைத்தலைவர் தேர்தல் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற உள்ளது.

புதுவை சட்டப்பேரவை துணைத்தலைவர் தேர்தல்: ராஜவேலு வேட்புமனு

புதுவை சட்டப்பேரவை துணைத்தலைவர் தேர்தல்: ராஜவேலு வேட்புமனு
புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை துணைத்தலைவர் தேர்தல் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் புதன்கிழமையோடு முடிகிறது. இந்த நிலையில், புதுவை சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவிக்கு என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜவேலு, புதுவை சட்டப்பேரவை செயலாளர் முனுசாமியிடம் புதன்கிழமை காலை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது முதலமைச்சர் என். ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வேட்புமனுத் தாக்கலுக்கு போட்டி இல்லாத பட்சத்தில், ராஜவேலு துணைத்தலைவராக அறிவிக்கப்படுவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...