
மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் விநாயகர் உருவப் படத்தை வைத்து காவலர் ஒருவர் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், மகாராஷ்டிரம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும் இன்னும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் கட்டுப்பாடுகள் தொடர்பாக தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தாணே பகுதியில் காவலர் ஒருவர் விநாயகர் படத்தை வைத்து கரோனா கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
காவல் துறை உடையணிந்த விநாயகர் கரோனா கட்டுப்பாடுகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகை மூலம் பொதுமக்களு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இது பொதுமக்களிடையே மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.