மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமானது ஹிமாசல்

ஹிமாசலில் இளைஞர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்திலுள்ள இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக ஹிமாசல் மாறியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஆகஸ்ட் 2021, 11:46 am

ஹிமாசலில் இளைஞர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்திலுள்ள இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக ஹிமாசல் மாறியுள்ளது.

இதனால் ஹிமாசல் அரசுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, இளைஞர்கள் அனைவருக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக ஹிமாசல் மாறியுள்ளது.

அங்கு இளைஞர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனையை எட்டியுள்ள மாநில நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள். 

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தடுப்பூசி பிரசாரம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.