கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

உத்தரப் பிரதேசம் : மதுராவில் மது , மாமிசம் விற்பனை செய்ய தடை

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற  ஏழு ஆன்மிகதலங்களைக் கொண்ட ஊர்களில்  மது, மாமிசத்தை விற்க தடை விதிப்பதாக புதிய உத்தரவு ஒன்றை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்த

News image

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)

Updated On :31 ஆகஸ்ட் 2021, 11:21 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற  ஏழு ஆன்மிகதலங்களைக் கொண்ட ஊர்களில்  மது, மாமிசத்தை விற்க தடை விதிப்பதாக புதிய உத்தரவு ஒன்றை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.

இதையும் படிக்க | 

மதுராவில் நேற்று (ஆக-30) கிருஷ்ணர் ஜெயந்தியைக் கொண்டாட வந்த ஆதித்யநாத் கிருஷ்ணர் வழிபாடு முடிந்ததும் அங்குள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்  மதுராவில் இனி மது, மாமிசம் விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசிய போது  ‘‘கடந்த 2017 ஆம் ஆண்டு  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிருந்தாவன் மற்றும் மதுரா மாநகராட்சிகள் இணைக்கப்பட்டன. மேலும் இப்பகுதியைச் சுற்றியுள்ள மற்ற ஆன்மிக தலங்கள் புனிதத்தலங்களாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்நகரத்தின் புனிதத்தைக் காக்க இந்த 7 நகரங்களிலும் இனி மது மற்றும் மாமிசங்களை விற்பனை செய்ய அனுமதி இல்லை ' எனத் தெரிவித்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.