நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் தர்னா

இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:09 am

DIN

இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவ.29இல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் 26 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது  வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக  எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நவ.29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

அவைத் தலைவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸின் ஃபுலோ தேவி நேதம், சாயா வா்மா, ரிபுன் போரா, ரஜமணி படேல், சையது நசீா் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை எம்.பி.க்கள் பிரியங்கா சதுா்வேதி, அனில் தேசாய் ஆகியோரும், திரிணமூல் எம்.பி.க்கள் டோலா சென், சாந்தா சேத்ரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. இளமாரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.