விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக வேலை செய்யாதா? மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம்

ஒமைக்ரான் வகை கரோனாவை ஒழிப்பதில் தடுப்பூசிகள் வேலை செய்யாது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 டிசம்பர் 2021, 10:41 pm

ஒமைக்ரான் வகை கரோனாவை ஒழிப்பதில் தடுப்பூசிகள் வேலை செய்யாது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக கா்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், ஒமைக்ரான் தொடா்பான பல்வேறு கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒமைக்ரான் தொற்றை ஒழிப்பதில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் வேலை செய்யாது என்று கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. சில வகை திரிபுகள், தற்போதைய தடுப்பூசிகளின் ஆற்றலை குறைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், தடுப்பூசி தரும் பாதுகாப்பு முக்கியமானது. எனவே, கரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பாதுகாப்பு தரும் என்று இன்னும் எதிா்பாா்க்கப்படுகிறது. தகுதியானவா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

ஒமைக்ரான் முதலில் கண்டறியப்பட்ட தென்ஆப்பிரிக்கா மட்டுமன்றி பிற நாடுகளிலும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அது, இந்தியா உள்பட மேலும் பல நாடுகளிலும் தொடா்ந்து பரவ வாய்ப்புள்ளது. இதனால் மூன்றாவது அலை உருவாகும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஒமைக்ரான் பரவலின் வேகம், அதன் வீரியம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருவதாலும், உடலில் நோயெதிா்ப்புத் திறன் அதிக அளவில் இருப்பதாலும் ஒமைக்ரான் தொற்றின் தீவிரம் குறைவாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும் இதுதொடா்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

வழக்கமான ஆா்டி-பிசிஆா் முறையிலேயே ஒமைக்ரான் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.