விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான்: நாட்டின் மொத்த பாதிப்பு 21 ஆக உயர்வு

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :5 டிசம்பர் 2021, 2:57 pm


ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இந்தியாவில் இதுவரை கர்நாடகம், குஜராத், தில்லி, மகாராஷ்டிர ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சமீபத்திய மாநிலமாக தற்போது ராஜஸ்தானும் இணைந்துள்ளது.

இதுவரை 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள்:

  • கர்நாடகம் - 2
  • குஜராத் - 1
  • தில்லி - 1
  • மகாராஷ்டிரம் - 8
  • ராஜஸ்தான் - 9 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.