மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான்

மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக இந்தியாவையும் அச்சுறுத்தத் தொடங்கியது. ஏற்கெனவே, கர்நாடகத்தில் இரண்டு பேருக்கும், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தன்சானியாவிலிருந்து தில்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம், அந்த மாநிலத்தில் மட்டும் ஒமைக்ரான் வகை பாதிப்பால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள மாநிலங்கள்:

  • கர்நாடகம் - 2
  • குஜராத் - 1
  • தில்லி - 1
  • மகாராஷ்டிரம் - 8  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com