பாஜகவில் இணையும் கோவா காங்கிரஸ் எம்எல்ஏ
கோவா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரவி நாயக் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.


கோவா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரவி நாயக் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.
கோவா சட்டப்பேரவைத் தலைவர் ராஜேஷ் பட்னேகரிடம் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
ரவி நாயக் 19998-99 களில் மக்களவை உறுப்பினராகவும் 1991-93, 1994 ஆம் ஆண்டுகளில் கோவா முதல்வராகவும் இருந்துள்ளார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவராக இருந்த ரவி நாயக் இன்று பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரவி நாயக் ராஜிநாமா செய்தது காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...