இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

குளிர்காலக் கூட்டத்தொடர்: பாஜக எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை

குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 டிசம்பர் 2021, 5:10 am

DIN

குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மீதமுள்ள நாள்களில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் மைத் ஷா, பியூஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி, ஜித்தேந்தர் சிங், அருண் ராம் மெஹ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.