நீதிபதிகளுக்கான ஓய்வூதிய திருத்த மசோதா: மாநிலங்களவையில் இன்று தாக்கல்

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான ‘ஊதியம் மற்றும் பணி வரன்முறை திருத்த மசோதா 2021’ இன்று மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்யவுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான ‘ஊதியம் மற்றும் பணி வரன்முறை திருத்த மசோதா 2021’ இன்று மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்யவுள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எந்த வயதில் உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் அல்லது உயா்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் நீதிபதிகளுக்கான ஊதியம் மற்றும் பணி வரன்முறை சட்டத்தில் உள்ள 17பி மற்றும் 16 பி பிரிவுகளில் திருத்தம் செய்யும் வகையில், மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவையின் இன்றைய கூட்டத்தொடரில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் திருத்தப்பட்ட மசோதாவை தாக்கல் செய்யவுள்ளார்.

முன்னதாக இந்த மசோதாவை கடந்த டிசம்பர் 8ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com