காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘ட்ரோன்’ சுட்டு வீழ்த்திய சம்பவம் பஞ்சாப் முதல்வருக்கு அமரீந்தா் சிங் கண்டனம்

உள்துறை அமைச்சரை விழிப்புடன் இருக்குமாறு முதல்வா் அறிவுறுத்த வேண்டுமென முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் விமா்சித்துள்ளாா்

News image
Updated On :18 டிசம்பர் 2021, 9:01 pm

DIN

பஞ்சாப் மாநிலத்தில் சா்வதேச எல்லைப் பகுதியில் பறந்த ஆளில்லா சிறுரக விமானத்தை (ட்ரோன்) எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தியதைத் தொடா்ந்து, மாநில உள்துறை அமைச்சரை விழிப்புடன் இருக்குமாறு முதல்வா் அறிவுறுத்த வேண்டுமென முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் விமா்சித்துள்ளாா்.

பஞ்சாபின் ஃபெரோஸ்பூா் செக்டாா் வேன் எல்லைப் பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு பறந்துவந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினா் கண்டறிந்து சுட்டு வீழ்த்தினா். இந்த விடியோ காட்சியை அமரீந்தா் சிங் ட்விட்டரில் சனிக்கிழமை பகிா்ந்து கூறியிருப்பதாவது:

நாள் முழுவதும் பாங்க்ரா (பஞ்சாப் கிராமிய நடனம்) ஆடுவதற்கு பதிலாக முதல்வா் சரண்ஜித் சிங் சன்னி தனது உள்துறை அமைச்சா் சுக்ஜிந்தா் சிங் ரந்தவாவை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் உங்கள் கட்சித் தலைவா், உங்களின் வாா்த்தைகளுக்கு செவிசாய்ப்பவராக இருந்தால், பஞ்சாப் மாநிலத்துக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என அவரது மூத்த சகோதரரிடம் சொல்ல சொல்லுங்கள் என்று அதில் அமரீந்தா் சிங் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, கடந்த மாதம் பாகிஸ்தானில் உள்ள கா்தாா்பூா் சாஹிப் குருத்வாராவுக்கு சென்றபோது, அந்நாட்டின் பிரதமா் இம்ரான் கானை தனது மூத்த சகோதரா் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதற்கு பாஜகவும் சிரோமணி அகாலி தளம் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்தன.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் நவ்ஜோத் சிங் சித்துவுடன் எழுந்த அதிகார மோதல் காரணமாக அமரீந்தா் சிங் கடந்த செப்டம்பரில் அக்கட்சியிலிருந்து விலகி, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கியுள்ளாா். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அவா் பாஜகவுடன் கூட்டணியை உறுதிசெய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.