தில்லி, நொய்டாவில் 'மோசம்' பிரிவில் தொடர்ந்து நீடிக்கும் காற்றின் தரம்!

தில்லி மற்றும் நொய்டாவில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவிலேயே தொடர்ந்து நீடிப்பதாகமத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி, நொய்டாவில் 'மோசம்' பிரிவில் தொடர்ந்து நீடிக்கும் காற்றின் தரம்!
Published on
Updated on
1 min read

தில்லி மற்றும் நொய்டாவில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவிலேயே தொடர்ந்து நீடிப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தலைநகர் தில்லியில் காற்றின் தரக்குறியீடு 290 என்ற அளவில் உள்ளது. 

காற்றில் உள்ள பி.எம். 2.5 மற்றும் பி.எம். 10 துகள்களின் அளவு முறையே 101 மற்றும் 181 என்ற அளவில் உள்ளது. 

தில்லி மட்டுமின்றி நொய்டா, குருகிராம் ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமாகக் காணப்படுகிறது. நொய்டாவில் காற்றின் தரக்குறியீடு 293 என்ற அளவிலும், குருகிராமில் 225 என்ற அளவிலும் உள்ளது. 

அதிகளவிலான வாகன இயக்கம், தொழிற்சாலைகள், விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் தில்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு அதிகமாக இருப்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வார தொடக்கத்தில் நடந்த மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, தில்லியில் அத்தியாவசியமற்ற லாரிகள் நுழைவதற்கான தடையை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது. எனினும் தில்லியில் பள்ளிகள் மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது காற்று மாசு அதிகரிக்கக் காரணமாக உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com