மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை என்று மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் அரசு பிறப்பித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கூடும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் அந்தந்த மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
பொது இடங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஒருசில மாநிலங்கள் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் மும்பையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை என்று மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மக்கள் முறையாக அதனைப் பின்பற்ற வேண்டும். மும்பை காவல் துறையும், மாநகராட்சியும் இதனைக் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

🔴கேரளம்: வாக்காளர்களுக்கு சாதகமாக வெய்யில் நிலவரம் - செய்திகள் உடனுக்குடன்!

அதிமுக வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடாது: செந்தில் பாலாஜி

அடுத்தடுத்து ரூ. 100 கோடி! அசத்தும் மலையாளத் திரைத்துறை!
தமிழ்நாட்டின் எல்லைச்சாமி யார்? இளிச்சவாயன் யார்? ஆ. ராசா
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


