நாட்டில் புதிதாக 7,145 பேருக்கு கரோனா; 6,096 பேர் மீண்டனர்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,317 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
நாட்டில் புதிதாக 7,145 பேருக்கு கரோனா; 6,096 பேர் மீண்டனர்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,317 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,317 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,47,58, 481 ஆக உயர்ந்துள்ளது. 318 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,78,325. உயிரிழந்தோர் விகிதம் 1.38 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை 6,096 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,01,966. குணமடைந்தோர் விகிதம் 98.40 ஆக உயர்ந்துள்ளது.  

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 78,190 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 575 நாள்களில் மிக குறைந்த எண்ணிக்கை ஆகும். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.22 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 66,73,56,171 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,29,512 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் இதுவரை 1,38,95,90,670 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 57,05, 03 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மொத்தம் 220 ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களில், தில்லி மற்றும் மகாராஷ்டிரத்தில் முறையே 57 மற்றும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 90 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com