மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜார்க்கண்டில் கும்பல் வன்முறை, கும்பல் படுகொலைக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் வன்முறை மற்றும் கும்பல் படுகொலைக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

Updated On :22 டிசம்பர் 2021, 6:22 am

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் வன்முறை மற்றும் கும்பல் படுகொலைக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் வன்முறை, கும்பல் படுகொலைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. 

இதைடுத்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் கும்பல் வன்முறை மற்றும் கும்பல் படுகொலைகள் தடுப்பு மசோதா, 2021 தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் கும்பல் வன்முறைகளைத் தடுக்கவும் மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. 

இதன் மூலமாக கும்பல் வன்முறை மற்றும் கும்பல் கொலைகளில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத்தண்டனை கிடைக்கலாம். 

கும்பல் கொலையால் ஒருவர் இறந்தால் அந்த குற்றவாளிகளுக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

கும்பல் வன்முறை, கும்பல் படுகொலைச் சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும் இதனைத் தடுக்க தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று கடந்த 2019ல் உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. அதன்படி ஜார்க்கண்ட் அரசு இதுகுறித்து ஆராய ஒரு குழுவை அமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.