மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்யப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தொடருக்கு முன்னதாக இன்று செய்யப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் போலீசார் மற்றும் 2 பேர் சட்டப்பேரவை ஊழியர்கள். பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 10 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், அவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஏனெனில் மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் பேரவை எம்எல்ஏக்கள், பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பதால் கூட்டத்தொடர் தொடங்கியது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குவதையொட்டி 3,500 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

