மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவுக்குள் நுழைந்தது ஒமைக்ரான்: மக்களுக்கு நவீன் பட்நாயக் எச்சரிக்கை

ஒடிசா மக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றுமாறு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

News image

ஒடிசாவுக்குள் நுழைந்தது ஒமைக்ரான்: மக்களுக்கு நவீன் பட்நாயக் எச்சரிக்கை

Updated On :22 டிசம்பர் 2021, 10:06 am


புவனேஸ்வரம்: ஒடிசாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மாநில மக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றுமாறு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

விடியோ மூலம், மாநில மக்களிடம் உரையாற்றியிருக்கும் நவீன் பட்நாயக், உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கரோனா வேகமாகப் பரவி வருகிறது.

இதையடுத்து நான் மக்களுக்கு ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன், கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது போன்றவற்றை பின்பற்றுங்கள்.

வெளிநாட்டிலிருந்து ஒடிசா திரும்பியவர்களில் கரோனா உறுதி செய்யப்பட்ட இரண்டு பேருக்கு செய்யப்பட்ட கரோனா மரபணு வரிசைமுறை பரிசோதனையில், இருவருக்கும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.