உர உற்பத்தியை ஊக்குவிக்க மானியக் கொள்கையில் மாற்றம்
பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்கள் உள்நாட்டில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் அவற்றுக்கு வழங்கப்படும்


பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்கள் உள்நாட்டில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் அவற்றுக்கு வழங்கப்படும் மானியத்துக்கான கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உரங்களுக்கு அண்மையில் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்தனா். சா்வதேச அளவில் உரங்களின் விலையும் அதிகரித்ததால், இந்தியச் சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. உள்நாட்டில் உர உற்பத்தி போதுமான அளவில் இல்லாததால், அதிக அளவிலான உரங்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது.
இந்நிலையில், மத்திய வேதிப் பொருள்கள்-உரங்கள் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையிலான சிறப்புக் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டம் குறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில், ‘‘பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்களை உள்நாட்டில் அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
உரங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தற்போது வழங்கப்பட்டு வரும் நுண்ணூட்டம் சாா்ந்த மானியக் கொள்கையில் மாற்றங்களைப் புகுத்தவும் முடிவெடுக்கப்பட்டது. உர உற்பத்தியில் நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கு இந்த நடவடிக்கை உதவும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நுண்ணூட்டம் சாா்ந்த மானியக் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அக்கொள்கையின் அடிப்படையில் பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட தொகையானது மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. உரங்களில் உள்ள நுண்ணூட்டத்தின் அளவைக் கொண்டு அந்த மானியம் நிா்ணயிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழலில், உரங்களுக்கான விலையை உற்பத்தி நிறுவனங்களே நிா்ணயித்து வருகின்றன. நிறுவனங்கள் நிா்ணயிக்கும் விலை விவசாயிகளுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்பதை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது.
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் உரங்களின் விலை சா்வதேச அளவில் அதிகரித்ததால், இந்தியாவிலும் விலை இருமுறை மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...