பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புது தில்லியில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா: ஆனால்?

கரோனா பாதிப்பு அதிகரித்து, மூன்றாவது அலை எழக்கூடுமோ என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், புது தில்லியில் வெள்ளிக்கிழமை 180 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
புது தில்லியில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா: ஆனால்?
Updated On :25 டிசம்பர் 2021, 9:11 am

DIN


புது தில்லி: கரோனா பாதிப்பு அதிகரித்து, மூன்றாவது அலை எழக்கூடுமோ என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், புது தில்லியில் வெள்ளிக்கிழமை 180 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச பாதிப்பாகும். கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் உறுதியாகும் விகிதமானது 0.29 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஜூன் 15ஆம் தேதிக்குப் பின் பதிவாகும் அதிகபட்ச உறுதியாகும் விகிதமாகும்.

இதுவரை தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 14,42,813 ஆக உள்ளது. இவர்களில் 14.16 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர்.

வெள்ளிக்கிழமை கரோனாவால் யாரும் பலியாகவில்லை. இதுவரை டிசம்பர் மாதத்தில் கரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25,103 ஆக உள்ளது. 

இந்த அளவுக்கு கரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்ன என்பது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கரோனா பரிசோதனை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். இங்கிலாந்து, துபையிலிருந்து வரும் பயணிகள் ஏராளமானோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கரோனா உறுதியானதும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் சோதனை நடத்தப்படுகிறது. இதனால்தான், இந்த அளவுக்கு பாதிப்பு உயர்ந்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.