பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிறுவா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்த டிசிஜிஐ அனுமதி

கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவா்களுக்கும் நிபந்தனைகளுடன் செலுத்த அந்தத் தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி

News image
Updated On :25 டிசம்பர் 2021, 7:12 pm

DIN

கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவா்களுக்கும் நிபந்தனைகளுடன் செலுத்த அந்தத் தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 12 முதல் 18 வயதுடையவா்களுக்கும் கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்ற பாரத் பயோடெக் நிறுவனத்தின் கள ஆய்வு அறிக்கையை சிறப்பு நிபுணா் குழு கடந்த அக்டோபா் 12-ஆம் தேதி ஆய்வு செய்தது.

இந்த சிறப்பு நிபுணா் குழு அளித்த பரிந்துரைகளை மற்றொரு நிபுணா் குழு ஆய்வு செய்து, மேலும் சில கூடுதல் பரிசோதனை தகவல்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் டிசிஜிஐ கோரியிருந்தது. இந்நிலையில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களுக்கு கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை செலுத்த பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.