
புது தில்லி: முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த அடல் பிகாரி வாஜ்பாயியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
1924ஆம் ஆண்டு குவாலியரில் டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் வாஜ்பாயி. நீண்ட காலம் பாஜகவின் தலைவராக பதவி வகித்தவர். முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத மற்று கட்சியைச் சேர்ந்த ஒருவர், பிரதமராக 5 ஆண்டுகாலம் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர்.
இதையும் படிக்க.. கதையல்ல.. நிஜம்: மாதம் ரூ.20,000 சம்பாதிக்கும் சூரத் சிறைக் கைதிகள்
அவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், புது தில்லியில் உள்ள வாஜ்பாயியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.