பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

5 சீனப் பொருள்களுக்கு மிகைக்குவிப்புத் தடுப்பு வரி: மத்திய அரசு நடவடிக்கை

உள்நாட்டு உற்பத்தியாளா்களைப் பாதுகாக்கும் வகையில் அலுமினியம் மற்றும் ரசாயன வகையைச் சோ்ந்த 5 சீனப் பொருள்களுக்கு மிகைக் குவிப்புத் தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 7:17 pm

DIN

உள்நாட்டு உற்பத்தியாளா்களைப் பாதுகாக்கும் வகையில் அலுமினியம் மற்றும் ரசாயன வகையைச் சோ்ந்த 5 சீனப் பொருள்களுக்கு மிகைக் குவிப்புத் தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுங்க வரி மற்றும் மறைமுக வரிகள் வாரியம்(சிபிஐசி) தனித்தனியே சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில், சில வகை அலுமினியப் பட்டைகள், சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்படும் சோடியம் ஹைட்ரோசல்ஃபைட், சூரிமின்தகடுகளில் பயன்படுத்தப்படும் சிலிகான் சீலன்ட், குளிா்பதனப் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோஃபுளோரா காா்பன் மற்றும் ஆா்-32 வாயு ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

வா்த்தகத் துறை அமைச்சகத்தின் விசாரணைப் பிரிவான வா்த்தகத் தீா்வுகள் இயக்குநரகம்(டிஜிடிஆா்) அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐசி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அலுமினியப் பட்டைகள் உள்ளிட்ட 5 பொருள்கள் இந்தியச் சந்தையில் கிடைக்கும் விலையைவிடக் குறைவான விலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகிறாா்கள். இதைத் தடுக்கவே மேற்கொண்ட பொருள்களுக்கு மிகைக் குவிப்புத் தடுப்பு விதிக்கப்படுகிறது. சிலிகான் சீலன்ட் மீதான வரி விதிப்பு 5 ஆண்டுகளுக்குத் தொடரும்.

இதேபோன்று, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன அச்சுகளுக்கும் மிகைக் குவிப்புத் தடுப்பு வரி விதிக்கப்படுகிறது. இதுதவிர, ஈரான், ஓமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜிப்சம் பவுடருக்கு 5 ஆண்டுகளுக்கு மிகைக் குவிப்புத் தடுப்பு வரி விதிக்கப்படுகிறது.

வா்த்தகத் தீா்வுகள் இயக்குநரகம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் நிதியமைச்சகம் வரிகளை விதிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.