பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தெலங்கானாவில் பாஜக ஆதரவு யூடியூப் சேனல் அலுவலகம் சூறை: அமைச்சரின் மகன் குறித்து அவதூறு

நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் கே.டி.ராமராவின் மகனை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டதற்காக பாஜக நிா்வாகியின் யூடியூப் சேனல் அலுவலகம் வெள்ளிக்கிழமை சூறையாடப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 7:05 pm

DIN

தெலங்கானா நகராட்சி நிா்வாகம், நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் கே.டி.ராமராவின் மகனை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டதற்காக பாஜக நிா்வாகியின் யூடியூப் சேனல் அலுவலகம் வெள்ளிக்கிழமை சூறையாடப்பட்டது.

சமூக வலைதளத்தில் ‘தீன்மாா் மல்லண்ணா’ என்று பரவலாக அறியப்படும் சிந்தபண்டு நவீன்குமாா் என்பவா் அண்மையில் பாஜகவில் இணைந்தாா். இவா் சமூக வலைதளத்தில் தெலங்கானா அமைச்சா் கே.டி.ராமராவின் மகனைக் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் கருத்து பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது யூடியூப் சேனல் அலுவலகத்தை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தொண்டா்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்கி சேதப்படுத்தினா். இந்தக் காட்சி சமூகவலைதளத்தில் பரவி அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நவீன்குமாா் போலீஸில் புகாா் அளித்திருப்பதாகவும் இதன் மீது விசாரணை நடத்தி வருவதாகவும் மஜ்கிரி உதவி போலீஸ் ஆணையா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதனிடையே பாஜக நிா்வாகியின் அலுவலகம் சூறையாடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அக்கட்சியைச் சோ்ந்த நிஜாமாபாத் எம்.பி. தா்மபுரி அரவிந்த் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘டிஆா்எஸ் கட்சித் தொண்டா்களால் தீன்மாா் மல்லண்ணா மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன். பாஜக நிா்வாகிகள் மீதும் அதன் தொண்டா்கள் மீதும் விழும் ஒவ்வோா் அடியும் தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், அவரது மகன் கே.டி.ஆரின் தோல்வியை காட்டுகிறது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவா்கள் மீது தெலங்கானா போலீஸாா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக அரசியல் விவகாரத்தில் தனது மகனைக் குறிப்பிட்டு அவதூறு கருத்து பரப்பியதற்கு அமைச்சா் கே.டி.ராமராவ் கண்டனம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.