பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்திய அரசுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது கெய்ா்ன்

முன்தேதியிட்டு வரி வசூலித்த விவகாரத்தில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டதைத் தொடா்ந்து, இந்திய அரசுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தொடுத்த வழக்குகளை கெய்ா்ன் நிறுவனம் திரும்பப் பெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 7:21 pm

DIN

முன்தேதியிட்டு வரி வசூலித்த விவகாரத்தில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டதைத் தொடா்ந்து, இந்திய அரசுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தொடுத்த வழக்குகளை கெய்ா்ன் நிறுவனம் திரும்பப் பெற்றது.

பிரிட்டனை சோ்ந்த கெய்ா்ன் எனா்ஜி நிறுவனத்திடம் மத்திய அரசு முன்தேதியிட்டு வரியை வசூல் செய்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக சா்வதேச தீா்ப்பாயத்தில் அந்நிறுவனம் முறையிட்டது. அதை விசாரித்த தீா்ப்பாயம், கெய்ா்ன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய சுமாா் ரூ.10,247 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென்று கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவை ஏற்காத மத்திய அரசு, அதை ரத்து செய்ய வேண்டும் என்று தீா்ப்பாயத்தில் முறையிட்டது. எனினும், மத்திய அரசிடமிருந்து தொகையை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை கெய்ா்ன் நிறுவனம் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, இந்திய பொதுத்துறை நிறுவனமான ஏா் இந்தியாவுக்குச் சொந்தமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சொத்துகளை முடக்குவதற்கு அனுமதி கோரி அந்நாட்டு நீதிமன்றங்களில் அந்நிறுவனம் முறையிட்டிருந்தது.

இதனிடையே, முன்தேதியிட்டு வரி வசூலிப்பதற்கு வழிவகுக்கும் விதிகளை ரத்து செய்யும் நோக்கில் வரிவிதிப்பு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டில் இயற்றியது. முன்தேதியிட்டு வசூலிக்கப்பட்ட வரித் தொகையை வட்டியின்றி நிறுவனங்களிடம் திருப்பி வழங்கவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டது. அதன்படி, கெய்ா்ன் நிறுவனத்துக்கு மத்திய அரசிடமிருந்து ரூ.7,900 கோடி கிடைக்கும்.

இந்தப் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண்பதற்கான மத்திய அரசின் பரிந்துரையை கெய்ா்ன் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில், வெளிநாடுகளில் மத்திய அரசுக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க், வாஷிங்டன் நகர நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளைக் கடந்த 15-ஆம் தேதி கெய்ா்ன் நிறுவனம் திரும்பப் பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோரீஷஸ் நாட்டில் இந்தியாவுக்குச் சொந்தமாக உள்ள சொத்துகளை முடக்குவதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்குகளையும் அந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

அதேபோல், பிரான்ஸ், பிரிட்டன், சிங்கப்பூா், கனடா, நெதா்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்திய அரசுக்கு எதிராக கெய்ா்ன் நிறுவனம் தொடுத்துள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், அடுத்த சில நாள்களில் அவை முடிவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.