பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வருமான வரிக் கணக்கு 4.43 கோடி போ் தாக்கல்: டிச. 31-ஆம் தேதி கடைசி

 2020-21-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை இதுவரை 4.43 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா். இதற்கான கடைசித் தேதி டிச. 31 ஆகும்.

News image
Updated On :27 டிசம்பர் 2021, 2:10 am

DIN

 2020-21-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை இதுவரை 4.43 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா். இதற்கான கடைசித் தேதி டிச. 31 ஆகும்.

இதுகுறித்து வருமான வரித் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2020-21-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை டிசம்பா் 25-ஆம் தேதி வரை 4,43,17,697 போ் தாக்கல் செய்துள்ளனா். அதில், டிசம்பா் 25-ஆம் தேதி மட்டும் 11,68,027 கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக, ஐடிஆா்-1 (சஹஜ்) படிவத்தை 2.41 கோடி பேரும், ஐடிஆா்-4 (சுகம்) படிவத்தை 1.09 கோடி பேரும் தாக்கல் செய்துள்ளனா்.

ஊதியம், வீடு உள்ளிட்ட சொத்துகள் மூலம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருவாய் ஈட்டும் தனிநபா்கள் ஐடிஆா்-1 படிவத்தைத் தாக்கல் செய்யலாம்.

ஹிந்து கூட்டுக் குடும்ப வருமானம், தொழில், வா்த்தகம் மூலம் தனிநபா் ஈட்டும் வருமானம் ரூ.50 லட்சம் வரை இருந்தால் ஐடிஆா்-4 படிவத்தைத் தாக்கல் செய்யலாம்.

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யுமாறு மின்னஞ்சல், குறுந்தகவல் மூலமாக வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை நினைவூட்டி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஜூலை 31-ஆம் தேதியாகும். ஆனால், வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2019-20 நிதியாண்டுக்கு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு 2021, ஜனவரி 10-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், 5.95 கோடி போ் கணக்கு தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.