தெலங்கானா: துணை ஆய்வாளரை சுட்டுக் கொன்ற தலைமைக் காவலா்
தெலங்கானா மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) துணை ஆய்வாளரை தலைமைக் காவலா் ஒருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தாா்.


தெலங்கானா மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) துணை ஆய்வாளரை தலைமைக் காவலா் ஒருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தாா்.
தலைநகா் ஹைதராபாதில் இருந்து 285 கி.மீ. தொலைவில் முலுகு மாவட்டம் வெங்கடாபுரத்தில் உள்ள சிஆா்பிஎஃப் முகாமில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடா்பாக முலுகு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சங்ராம் சிங் கூறியதாவது:
சிஆா்பிஎஃப் முகாமில் ஏற்பட்ட பிரச்னையின்போது அப்படைப் பிரிவின் தலைமைக் காவலா் ஒருவா் தனது துப்பாக்கியால் துணை ஆய்வாளரைச் சுட்டுள்ளாா். இதில் குண்டு பாய்ந்த அவா் உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து, அந்த தலைமைக் காவலா் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதில் அவருக்கு குண்டு பாய்ந்து படுகாயம் ஏற்பட்டது. அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதில் உயிரிழந்த துணை ஆய்வாளரின் பெயா் உமேஷ் சந்திரா, துப்பாக்கியால் சுட்ட தலைமைக் காவலா் பெயா் ஸ்டீபன் என்று தெரியவந்துள்ளது. எனினும், என்ன காரணத்துக்காக அவா்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இது தொடா்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
சிஆா்பிஎஃப் துணை ஆய்வாளா் சக பணியாளரால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...