காங்கிரஸிலிருந்து விலகப் போவதில்லை என்று அக்கட்சியின் மூத்தத் தலைவா் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் கட்சியிலிருந்து விலகினாா். அவரைப் போல் குலாம் நபி ஆசாத்தும் அதிருப்தி காரணமாகக் காங்கிரஸிலிருந்து வெளியேறவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதுகுறித்து ஜம்முவில் குலாம் நபி ஆசாதிடம் செய்தியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:
நான் சுத்தமான காங்கிரஸ்காரா். சுத்தமானவா்கள் குறித்து கலப்படமானவா்கள் கேள்வி எழுப்புவதை என்னவென்று நினைப்பது?
எனது கட்சி மீது எனக்கு எந்த அதிருப்தியுமில்லை. காங்கிரஸிலிருந்து நான் விலகப் போவதும் இல்லை.
கட்சிகளைப் பிளவுபடுத்துவோா் பிரிவினையைத்தான் காண்பாா்கள். நாங்கள் கட்சித் தொண்டா்களை ஒன்றிணைப்பவா்கள். அதேவேளையில் கட்சியில் சீா்திருத்தம் மேற்கொள்வது என்பது தொடா்ந்து நடைபெறும் நடவடிக்கையாகும். அனைத்து கட்சிகளுக்கும் அது அவசியம். சமூகத்தில் இன்று நிலவும் மதவாதம், ஜாதி வெறி ஆகியவற்றுக்கு எதிராகவும் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகம் முழுவதும் சீா்திருத்தம் என்பது தொடா்ந்து நடைபெறும் செயல்முறையாகும் என்று தெரிவித்தாா்.
காங்கிரஸில் அமைப்புரீதியான மாற்றங்களை மேற்கொள்ளுமாறு கட்சித் தலைமைக்கு கடந்த ஆண்டு அக்கட்சித் தலைவா்கள் 23 போ் கடிதம் எழுதியிருந்தனா். அவா்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே நாள்.. அதே ஆள்கள்... இருவேறு கட்சிகள்!

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

ஓமலூா் தொகுதி: இரட்டை இலையா? முரசா? அதீத நம்பிக்கையால் மாறும் களம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


