வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஹரியாணா அமைச்சரவை நாளை(டிச.8) விரிவாக்கம்

ஹரியாணா மாநிலத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை நாளை மாலை பதவியேற்கும் என முதல்வர் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார்

Updated On :27 டிசம்பர் 2021, 11:31 am

ஹரியாணா மாநிலத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை நாளை மாலை பதவியேற்கும் என முதல்வர் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 90 தொகுதிகளில் பாஜக 40, காங்கிரஸ் 32 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதையடுத்து 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ஜனநாயக் ஜனதா தளத்தின் ஆதரவில் பாஜக ஆட்சி அமைத்தது.

இதையடுத்து முதல் முறையாக நவம்பர் 14, 2020 அன்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.