நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: மம்தா அதிருப்தி

அன்னை தெரசா அறக்கட்டளையின் அனைத்து வங்கிக் கணக்குகளும் மத்திய அரசால் முடக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளானதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி(கோப்புப்படம்)

Updated On :27 டிசம்பர் 2021, 2:37 pm

DIN

அன்னை தெரசா அறக்கட்டளையின் அனைத்து வங்கிக் கணக்குகளும் மத்திய அரசால் முடக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளானதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த மம்தா கூறியிருப்பதாவது:

கிறுஸ்துமஸ் தினத்தன்று அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

இதனால், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு, மருந்துகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

சட்டம் மிக முக்கியம் என்றாலும் மனிதாபிமான விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.