47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பஞ்சாப்: 5வது வேட்பாளர் பட்டியலில் முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த ஆம் ஆத்மி

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :28 டிசம்பர் 2021, 6:26 am

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் பேரவைத் தேர்தலில் 20 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி எதிர்க்கட்சியாக உள்ளது. இதனால் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. 

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் பிரசாரத்தையும் அவர் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். 

இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 15 பேர் கொண்ட ஐந்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டிலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

இதில், தற்போதைய பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியின் தொகுதியான ஸ்ரீ சம்கௌர் சாஹிப்பின் ஆம் ஆத்மி வேட்பாளராக சரண்ஜீத் சிங் என்பவர் அறிவித்து முதல்வருக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

முன்னதாக அக்கட்சி வெளியிட்ட, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 10 பேரும், இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலில் 30 பேரும், மூன்றாம்கட்ட வேட்பாளர் பட்டியலில் 18 பேரும், நான்காம்கட்ட வேட்பாளர் பட்டியலில் 15 பேரும்  இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.