பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விவசாயிகள் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் நாளை விவாதம்: வெங்கைய நாயுடு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து நாளை விவாதிக்கப்படும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

News image
விவசாயிகள் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் நாளை விவாதம்: வெங்கைய நாயுடு
Updated On :2 பிப்ரவரி 2021, 4:42 am

DIN


புது தில்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து நாளை விவாதிக்கப்படும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டநிலையில் மாநிலங்களவை இன்று காலை கூடியதும், மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து மாநிலங்களவையில் நாளை விவாதிக்கப்படும் என்று வெங்கையா நாயுடு அறிவித்தார். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், மீண்டும் அவைக்குள் வந்து முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இதனால், மாநிலங்களவையை இன்று காலை 10.30 மணி வரை ஒத்திவைப்பதாக வெங்கைய நாயுடு அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.