டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

‘சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை’: ராகுல் காந்தி விமர்சனம்

இந்திய எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு சீனாவை எதிர்க்க தைரியம் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

News image
‘சீனாவை எதிர்க்க மோடிக்கு தைரியம் இல்லை’: ராகுல் காந்தி விமர்சனம்
Updated On :2 பிப்ரவரி 2021, 11:46 am

DIN

இந்திய எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு சீனாவை எதிர்க்க தைரியம் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே சுமாா் 10 மாதங்களாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளின் தரப்பிலும் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் படைவீரா்கள் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் இரு நாடுகளுக்கிடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது சுட்டுரைப் பதிவில் விமர்சனம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, “சீனா என்ற வார்த்தையைக் கூட சொல்ல எங்கள் பிரதமர் பயப்படுகையில், சீனா தொடர்ந்து தனது படைகளைத் தயார் செய்யவும், நிலைநிறுத்தவும் செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “அத்துமீறலைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை. துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் மோடிக்கு அந்த தைரியம் இல்லை” என விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.