நாட்டில் 19 நாள்களில் 44 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிவிரைவாக 19 நாள்களில் 44 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


புது தில்லி: உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிவிரைவாக 19 நாள்களில் 44 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 19 நாள்களில் நாடு முழுவதும் 44,49,552 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 3,10,604 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் ஒட்டுமொத்தமாக 44,49,552 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய முதல் 19 நாள்களில் அதிகபட்சமாகும்.
ஒட்டுமொத்தமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 54.87 சதவீதம் பேர் 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தொடா்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 1-ஆம் தேதி வரை அதிக எண்ணிக்கையிலான கரோனா தடுப்பூசிகளைப் பயனாளிகளுக்கு வழங்கிய முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. தடுப்பூசிகளை வழங்கும் பணியில் இந்தியா தொடா்ந்து மிக வேகமாக செயல்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...