ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்

'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்

News image
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ்
Updated On :27 ஜனவரி 2024, 7:27 pm

DIN

'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். 

வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிதிக்கொள்கைக் குழு கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்தார். 

ரெப்போ வட்டி விகிதம் 4% என்ற அளவிலும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35% என்ற அளவிலேயே தொடரும், இதனால் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது, மேலும் 2021-22 ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.5% ஆக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். 

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.