காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேளாண் சட்டங்களில் ஒரு குறையைக்கூட சுட்டிக்காட்ட முடியவில்லை: அமைச்சர் தோமர்

வேளாண் சட்டங்களில் உள்ள ஒரு குறையைக் கூட யாராலும் சுட்டிக்காட்ட முடியவில்லை என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

News image
Updated On :5 பிப்ரவரி 2021, 12:41 pm

DIN

வேளாண் சட்டங்களில் உள்ள ஒரு குறையைக் கூட யாராலும் சுட்டிக்காட்ட முடியவில்லை என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

தில்லியில் விவசாயிகளின் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 

விவசாயச் சட்டங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கிளர்ச்சி அடையவில்லை. வேளாண் சட்டங்கள் மீதான போராட்டங்கள் காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்திற்கு என்றே வரையறுக்கப்பட்டுள்ளன. போராட்டங்களுக்கு விவசாயிகள் தூண்டப்படுகிறார்கள். விவசாயத்திற்கு தேவை தண்ணீர் என்பதை உலகம் அறியும். காங்கிரஸால் மட்டுமே ரத்தத்தால் விவசாயம் செய்ய முடியும். 

வேளாண் சட்டங்களில் என்ன குறைகள் உள்ளன என்று யாரும் சுட்டிக்காட்ட மறுக்கிறார்கள். வெறுமனே சட்டங்களை ரத்து செய்ய மட்டும் வலியுறுத்துகிறார்கள். அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் விவசாயிகளின் நலனில் உறுதியாக உள்ளனர்.

ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் 1 லட்சம் கோடி மதிப்புள்ள விவசாய உள்கட்டமைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவையான முதலீடு விவசாயத் துறையை அடைவதை உறுதி செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.