எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசி கோரும் 25 நாடுகள்: ஜெய்சங்கர்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி மருந்துகள் இதுவரை 15 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் மேலும் 25 நாடுகள் காத்திருப்பதாக மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்

News image
இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசி கோரும் 25 நாடுகள்: ஜெய்சங்கர்
Updated On :6 பிப்ரவரி 2021, 9:26 am

PTI


அமராவதி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி மருந்துகள் இதுவரை 15 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் மேலும் 25 நாடுகள் காத்திருப்பதாக மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது பற்றி அவர் கூறுகையில், இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசி கோரும் நாடுகள் மூன்று வகைகளாக உள்ளன. ஒன்று, ஏழை நாடுகள், தடுப்பூசியின் விலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் நாடுகள் போன்றவை.

தற்போதைய நிலையில், இந்தியா இதுவரை 15 உலக நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளது. அதேவேளையில், மேலும் 25 நாடுகள், இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசியைப் பெறும் நடவடிக்கையின் பல்வேறு கட்டப் பணிகளில் உள்ளன. 

தற்போது இந்தியா எதை செய்து முடித்திருக்கிறதோ, அதன் அடிப்படையில், உலக வரைபடத்தில் இந்தியா முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று ஒரு கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.