காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விவசாயிகளின் நோக்கம் மத்தியில் ஆட்சி மாற்றமல்ல: டிகாயத்

​தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்குவது நோக்கமல்ல என பாரதிய கிஸான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகாயத் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :10 பிப்ரவரி 2021, 4:07 pm

DIN


தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்குவது நோக்கமல்ல என பாரதிய கிஸான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகாயத் தெரிவித்துள்ளார்.

தில்லி சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் மத்தியில் அவர் பேசியது:

"மத்தியில் ஆட்சி மாற்றத்தை நாம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அரசு அதன் பணியைச் செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த வேண்டும்.

விவசாயத் தலைவர்கள் அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்கும் வரை போராட்டங்கள் நீடிக்கும். 

நாடு முழுவதும் 40 லட்ச டிராக்டர்களுடன் பெரிதளவில் கூட்டங்கள் நடத்தி போராட்டங்கள் விரிவுபடுத்தப்படும். இந்த இயக்கத்தைப் பரப்புவதற்காக விவசாயத் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வார்கள்" என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.