புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: 77-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் 77 -ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


புதுதில்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் 77 -ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். விளைபொருள்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை தொடா்ந்து வழங்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை வீடு திரும்பப் போவதில்லை என தில்லியில் விவசாயிகள் 77 -ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் என 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
விவசாயிகள் தில்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை தில்லி காவல் துறை அதிகரித்துள்ளது. அங்கு பாதுகாப்புப் பணிக்காக ஆயிரக்கணக்கான காவலா்களும், துணை ராணுவப் படை வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் தொடா்கிறது.
தில்லி எல்லைகளில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...