தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உத்தரகண்ட்: நிவாரணப் பணிகளுக்காக தற்காலிக பாலம்

உத்தரகண்ட் மாநிலம் சமோலி பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்ட இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

News image

உத்தரகண்ட்: நிவாரணப் பணிகளுக்காக பாலம் அமைக்கும் வீரர்கள்

Updated On :11 பிப்ரவரி 2021, 6:21 am

DIN

உத்தரகண்ட் மாநிலம் சமோலி பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்ட இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால் தவுளிகங்கா ஆற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்.7) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

சமோலி மாவட்டத்தில் இமயமலைப் பகுதியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் நந்தாதேவி பனிப் பாறையின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்ததில், அங்கு ஓடும் கங்கை ஆற்றின் கிளை நதிகளில் திடீரென மிகப் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்கள் வெள்ளப்பெருக்கில் இடிந்து கடும் சேதமடைந்தன. அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களைத் தேடும் பணி 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமோலி மாவட்டத்தில் துண்டிக்கப்பட்ட இடங்களில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரேஷன் பொருள்களை சிரமமின்றி கொண்டுசெல்லும் வகையில், போக்குவரத்துத் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் தொங்கு பாலம் அமைக்கும் பணியினை வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.