தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 3,670 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 3,670 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :12 பிப்ரவரி 2021, 4:15 pm

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 3,670 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,670 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,56,575ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 36 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 51,451 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 2,422 பேர் குணமடைந்தனர். 
இதுவரை மொத்தம் 19,72,475 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 55,635 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்தம் 1,52,19,416 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 
தற்போது 31,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,68,087 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். மும்பையை பொறுத்தவரை இன்று 599 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.