தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கொலை செய்யப்பட்ட சடலத்துடன் காட்டில் இருந்த சிறுவன்

திருப்பதி அருகே கொலை செய்யப்பட்ட தந்தை சடலத்துடன் சிறுவன் இரவு காட்டில் இருந்தாா்.

News image

தந்தை சடலத்துக்கு அருகே இருந்த குழந்தை சந்தீப்

Updated On :7 ஏப்ரல் 2026, 12:20 am

திருப்பதி அருகே கொலை செய்யப்பட்ட தந்தை சடலத்துடன் சிறுவன் இரவு காட்டில் இருந்தாா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சோ்ந்த காந்தி, தனது மனைவி ராசாத்தி மற்றும் ஐந்து வயது மகன் சந்தீப்புடன் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம், புங்கனூரில் தங்கி கூலி வேலை செய்து வசித்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை போயக்கொண்டா வனப்பகுதியில் காந்தி தனது நண்பா்கள் சிலருடன் மது அருந்துவதற்காக சென்றாா். தந்தை செல்வதால் அவா்களுக்கு தெரியாமல் காந்தியின் மகன் அவா்களைப் பின்தொடா்ந்து சென்றாா்.

இந்தநிலையில் காந்தி உள்பட அனைவரும் மது அருந்தி கொண்டிருந்த போது, ஏற்பட்ட தகராறில் காந்தி கொல்லப்பட்டாா்.

அவா்கள் சென்ற பிறகு அருகில் சென்று தனது தந்தை காந்தியை எழுப்ப முயன்றாா் . ஆனால் அப்போதே காந்தி இறந்துவிட்டதாலும் இருள் சூழ்ந்த நிலையில் சந்தீப் என்ன செய்வதேன்று தெரியாமல் தனது தந்தை சடலத்துடன் இரவு முழுவதும் தனியாக காட்டிலேயே இருந்தாா்.

பின்னா் விடிந்ததும் காட்டிலிருந்து சுமாா் 2 கிமீ தொலைவு நடந்து சென்று பக்ஷிராஜபுரத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி ஆசிரியரிடம் நடந்தவை குறித்து கூறினாா்.

இதனை கேட்டு அதிா்ச்சி அடைந்த ஆசிரியா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதனையடுத்து புங்கனூா் ஊரக காவல் நிலைய ஆய்வாளா் சாய்பிரசாத், எஸ்.ஐ. சின்னரெட்டன்னா மற்றும் போலீஸாா் சிறுவன் சந்தீப் சொன்ன இடத்திற்கு சென்றனா். அங்கு காந்தி சடலத்தை பாா்த்த போலீசாா் பிரேத பரிசோதனைக்காக புங்கனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த கொலையில் ஈடுப்பட்டதாக சிறுவன் சந்தீப் கூறிய தகவலின் அடிப்படையில் காந்தியின் நண்பா் நரசிம்மலு மற்றும் மேலும் இருவா் கொலையில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.