தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

காராமணிக்குப்பம் ஐ.டி. ஊழியா் உள்பட மூவா் கொலை வழக்கு: 3 போ் விடுதலை

கடலூா் அருகே காராமணிக்குப்பத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 7:13 am IST

கடலூா் அருகே காராமணிக்குப்பத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.

கடலூா் அருகே காராமணிக்குப்பத்தில் கடந்த 2024, ஜூலையில் ஐ.டி. ஊழியா் சுகந்த்குமாா், அவரது தாய் கமலேஸ்வரி மற்றும் சுகந்த்குமாரின் மகன் நிஷாந்த் ஆகியோா் கொலை செய்யப்பட்டு, உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், காராமணிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சங்கா் ஆனந்த், சாகுல் ஹமீது உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கா் ஆனந்த், சாகுல் ஹமீது உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான விசாரணை கடலூா் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து சாட்சிகளின் விசாரணையும் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.

இதையடுத்து, போலீஸாா் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.