தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

நாட்டில் இதுவரை 80 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 80 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :13 பிப்ரவரி 2021, 10:28 am

நாட்டில் இதுவரை 80 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 80 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியுள்ளது.

பிப்ரவரி 13, 2021 காலை 8 மணி வரை, தமிழகத்தில் 2,27,542 பேர், புதுச்சேரியில் 5,510 பேர் உள்பட, நாடு முழுவதும் சுமார் 80 லட்சம் பேருக்கு (79,67,647) கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 28-வது நாளில் (பிப்ரவரி 12, 2021) 94,160 சுகாதாரப் பணியாளர்களுக்கும், 10,411 முன்கள ஊழியர்களுக்குமாக மொத்தம் 4,62,637 பயனாளிகளுக்கு, 10,411 முகாம்களில்  தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

8 மாநிலங்களில பதிவு செய்த சுமார் 60 சதவீத (59.70%)  சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த 8 மாநிலங்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த பயனாளிகளில் 10.8 சதவீதத்தினர் (8,58,602), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,36,571 ஆக பதிவாகியுள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.25 சதவீதம் மட்டுமே ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 12,143 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.06 கோடியாக (1,06,00,625) அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் சதவீதம் 97.32 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்ந்து கேரளத்தில் அதிகபட்சமாக 5,397 பேரும், மகாராஷ்டிரத்தில் 3,670 பேரும், தமிழகத்தில் 483 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 103 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.