தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கரோனா தினசரி உயிரிழப்பு 100-க்கும் கீழாக குறைவு

நாட்டில் உயிரிழப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது. 

News image

கோப்புப்படம்.

Updated On :14 பிப்ரவரி 2021, 11:39 am

நாட்டில் உயிரிழப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்பு வீதம் 1.5 (1.43%) சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இது உலகிலேயே மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 1.06 கோடி பேர் (1,06,11,731) குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 11,016 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் வீதம் 97.31 சதவீதமாக உள்ளது.

இன்று காலை 8 மணி வரை, நாட்டில் 82 லட்சம்  (82,63,858) சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது நேற்று தொடங்கப்பட்டது.

29வது நாளான நேற்று, 2,96,211 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களில் 23,628 சுகாதார பணியாளர்கள் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 1.37 (1,37,567) லட்சமாக குறைந்துள்ளது.

தினசரி கரோனா பாதிப்பு, கேரளத்தில் தொடர்ந்து அதிகளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 5,471 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக மகாராஷ்டிரத்தில் 3,611 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 477 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.