மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்தர்பூர் மாவட்டம் பரேத்தா கிராமத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி ஷிதல் அஹிர்வார் என்பவர் 150 பேருக்கு விருந்து வைத்துள்ளார். இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாங்கிய 'தில்ஸ்' என்ற பெயரில் உள்ள மதுபானமும் இடம்பெற்றுள்ளது.
இதில் ஷிதல் அஹிர்வார், அவரது மகன் ஹர்கோவிந்த், மருமகன் லாலுராம் அஹிர்வார் மற்றும் துளசிதாஸ் பிரார் என நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்களின் உடல் உறுப்பு மாதிரிகள் மற்றும் மதுபானங்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதுகுறிதது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சத்தர்பூர் காவல் கண்காணிப்பாளர் சச்சின் சர்மா தெரிவித்தார்.
மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலி மதுபானம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததே தொடர் விபத்துக்கு காரணம்: இபிஎஸ்

ஐபிஎல் 2026: குடிப் பழக்கத்தைக் கைவிட்ட சஹால்!

கேரளம்: காங்கிரஸ் கைப்பற்றுமா? அல்லது பினராயி 3.0 சாத்தியமா?

த்ரிஷ்யம் - 3 வெளியீடு தள்ளிப்போகிறதா?
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

